திரிபு (அறிவியல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திரிபு
தொகுபொருளின் மீது உருக்குலைவு விசை செயல்படும் பொது அதன் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும், ஆரம்ப பரிமாணத்திற்குமிடையே உள்ள தகைவு திரிபு எனப்படும்.
திரிபு = பரிமாண மாற்றம்/ ஆரம்ப பரிமாணம்
திரிபின் வகைகள்
தொகுதிரிபு மூன்று வகைப்படும்.
- நீட்சித் திரிபு
ஒரு கம்பியின் ஒரு முனையை இறுக்கமாக பொருத்தி மறுமுனையில் விசை செயற்படுத்தும் போது அதன் நீளம் அதிகரிக்கிறது.இதில் ஏற்படுகின்ற திரிபினை நீட்சித் திரிபு எனலாம். எனவே நீளத்தில் ஏற்படுகின்ற நீள அதிகரிப்பிற்கும், ஆரம்ப நீளத்திற்கும் உள்ள தகவே நீட்சித் திரிபு ஆகும்
நீட்சித் திரிபு= நீள அதிகரிப்பு/ ஆரம்ப நீளம்
- சறுக்குப் பெயர்ச்சி திரிபு
ஒரு பொருளின் மீது விசை செயற்படும் போதும், அதன் நீளம் அல்லது பருமன் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படாமல், உருவத்தில் மட்டும் மாற்றம் ஏற்படலாம். பொருளின் மீது தொடுவியல் விசை செயற்படுத்தும் போது அப்பொருள் திருப்பு விளைவிற்கு உட்பட்டு பொருளிலுள்ள அடுக்குகளுக்கு இடையே சார்புப்பெயர்ச்சி தோன்றுகிறது. எதனை சறுக்குப் பெயர்ச்சி என்பர். அடுக்கு சுற்றப்படுகின்ற கோணத்தினை சறுக்குப்பெயர்ச்சிக்கோணம் என்பர். இவ்வகையான திரிபினை சறுக்குப் பெயர்ச்சி திரிபு எனலாம்.
- பருமத்திரிபு
பரும மாற்றத்திற்கும்(v) சமநிலைப் பருமனுக்கும்(V) இடையிலான தகவு பருமத்திரிபு ஆகும்.
பருமத்திரிபு = பரும மாற்றம்/ சமநிலைப்பருமன் (v/V)