திரிபோலியா நுழைவாயில்

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நுழைவாயில்

திரிபோலியா நுழைவாயில் (Tripolia Gate) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள மேற்கு அச்மீர் பகுதியில் உள்ளது. 445 ஆண்டுகளுக்கு முன்னர் கிபி 1570 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசின் பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது.[1] இது 25 முதல் 30 மீட்டர் வரை உயரம் கொண்ட ஒரு பெரிய வளைவு நுழைவாயில் ஆகும். வாயில் காவலர்கள் பயன்படுத்த இடது பக்கத்தில் ஒரு தூண் மண்டபத்தைக் கொண்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது.[2] நகர அரண்மனைக்குச் செல்லும் பழைய நுழைவாயிலாக இது அறியப்படுகிறது. முகலாய, இராசபுத்திர மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு இவ்வாயில் கட்டப்பட்டுள்ளது.

திரிபோலியா நுழைவாயில்
Tripolia Gate
அமைவிடம்அச்மீர், இந்தியா
கட்டப்பட்டது1570 AD
க்காக கட்டப்பட்டதுமுகலாய அரச குடும்பம்
மீட்டெடுத்தவர்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
கட்டிட முறைஇசுலாம்
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "TRIPOLIA GATE | ARCHAEOLOGICAL SURVEY OF INDIA JAIPUR CIRCLE". asijaipurcircle.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  2. Khan, Shoeb (13 April 2017). "Ajmer mughal gates: 445 years on, Ajmer's Mughal-era gates still used for policing" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/jaipur/445-yrs-on-mughal-era-gates-still-serving-as-police-chowkis/articleshow/58149120.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபோலியா_நுழைவாயில்&oldid=3850190" இலிருந்து மீள்விக்கப்பட்டது