திரிப்பதாகம்
திரிப்பதாகம் என்பது பரதநாட்டியத்தின் முக்கிய கூறான முத்திரைகளில், ஒற்றைக்கை முத்திரைகளில் ஒன்றாகும். இது மரம் என்ற கருத்தைக் குறிக்கிறது. இது பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்து, அணி விரலை (மோதிர விரல்) மடிக்கும் போது உருவாகிறது.[1]
திரிபதாக விநியோகங்கள்
தொகுதிரிப்பதாகத்தில் மொத்தம் பத்து விநியோகங்கள் உள்ளன. சுலோகம்:-
- மகுடே விருக்சபாவனே
- வஜ்ரே தத்தரவாசவே
- கேதகே குசுமே தீபே
- வங்கிச்வாலாவிவிச்சுரும்பனே
- கபோதே பத்திரலேகாயாம்
- பாணார்த்தே பரிவர்த்தனே
- யுஜ்ஜதே திரிபதாகோயாம்
- கதிதோ பரதோத்தமைகி [2]
ஸ்லோகம் | கருத்து |
---|---|
மகுடே | மகுடம் |
விருக்சே | மரக்கிளை |
வஜ்ரே | இடி |
தத்தரவாசவே | இந்திரன் |
கேதகே குசுமே | பூக்கொத்து |
தீபே | தீபம் |
வங்கிச்வாலாவிவிச்சுரும்பனே | நெருப்பு |
கபோதே | புறா |
பத்திரலேகாயாம் | மார்பில் அல்லது முகத்தில் ஓவியம் வரைதல். |
பாணார்த்தே | அம்பு |
பரிவர்த்தனே | சுற்றுதல். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஒற்றைக்கை முத்திரைகள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
- ↑ "திரிப்பதாக விநியோகங்கள் (ஆங்கிலத்தில்)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.