திருகானப்பேர் உடையான்

திருக்கானப்பேர் உடையான் என்பவன் திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) ஆளுகைக்கு உட்பட்ட ஒரு குறுநில மன்னனாக விளங்கினான். இவனது தலைநகர் கானப்பேர். இவன் தன் ஆசிரியர் கவிராயர் ஈசுவர சிவ உடையார் என்பவருக்கு விளங்கிளி நல்லூர் என்னும் ஊரினை முற்றுட்டாக வழங்கிப் பாராட்டியவன்.[1]

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. திருப்பத்தூர் அரண்மனைச் சிறுவயல் ஊரிலுள்ள திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) கல்வெட்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகானப்பேர்_உடையான்&oldid=2715731" இலிருந்து மீள்விக்கப்பட்டது