திருகோணமலைச் செப்பேடு
இலங்கை தமிழ் செப்பேடு
திருகோணமலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான விடயங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பான பல சிறப்புக்களை திருகோணமலைச் செப்பேடு பின்வருமாறு விளக்குகின்றது.
திருமருவு காட்டுமாவடி பெருந்துறை சிந்த உத்தர தேசமும் செப்ப முடனேயுறைந் தொப்பித மிலாமலே செகமீது வரு தீரனாம் தருமருவு தெரியலவர் கொடி பெருமை தவள நிறத் தகமிவை தனிவிளக்கு தகமை பெறு பூனுலுடன் கவச குண்டலஞ் சரசமலர் முரசாசனம் அருமைசெறி ஆலாத்தி குடைதோரணமோடரிய மதில் பாவாடையோன அரசியின் குலமென அவள் நாமமே பெற்று அன்று சீர்பாதமானோன் உருமருவு தரையினில் அரிய புகழ்செறி உலகுமகிழ் மகிமையுடையோன் உரை விருது தனையுடைய ஆரியநாடு திரு வெற்றியூரரசு புவிவீரனே.[1] [2]