திருக்கண்ணன்

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் கபிலர் பாடிய முள்ளூர் மலையில் இருந்துகொண்டு ஆண்ட குறுநில மன்னன். சிறந்த கொடையாளி. வளவனின் கொடி இவனது கோட்டையில் பறந்தது. சோழநாடு அரசன் இல்லாமல் வாடிய காலத்தில் அங்கு ஆட்சி நிலைபெற உதவியவன். [1]

இவன் மலையமான் திருமுடிக்காரியின் மகன் எனவும், தன் தந்தை காரி உதவியதை போலவே, இத்திருக்கண்ணனும் சோழன் கிள்ளிவளவனின் ஆட்சியை மீட்க கிள்ளிவளவனுக்கு உதவினான் எனவும் கருதுகின்றனர்.

அடிக்குறிப்புதொகு

  1. புறநானூறு 174
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணன்&oldid=2566196" இருந்து மீள்விக்கப்பட்டது