திருக்கண்ணமங்கையாண்டான்

திருக்கண்ணமங்கையாண்டான் நாதமுனிகளின் சீடர்களில் ஒருவர். நாச்சியார் திருமொழிக்கு இவர் பாடிய இரண்டு தனியன் பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இடம்பெற்றுள்ளன.

பாடல்கள்தொகு

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தந்த்தில் இடம்பெற்றுள்ள இவரது இருபாடல்களில் ஒன்று நேரிசை வெண்பாவாகவும் மற்றொன்று கட்டளைக் கலித்துறையாகவும் அமைந்துள்ளன.

நேரிசை வெண்பாப் பாடல்
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
கட்டளைக் கலித்துறைப் பாடல்
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

வாழ்க்கைக் குறிப்புதொகு

திருக்கண்ணமங்கை இவரது ஊர். நாதமுனிகளின் தமக்கை இவரது மனைவி. இவர் நாதமுனிகளிடம் திருமறையெழுத்துக் காப்பினைப் [1] பெற்றார். தம்மூர்ப் பக்தவச்சலப் பெருமாளுக்குத் துளசிமாலை சாத்தித் தொண்டாற்றி வந்தார்.

ஒருநாள் வேடர் இருவரின் நாய்கள் சண்டையிட்டுக்கொண்டு இறந்தன. இதன்பொருட்டு வேடர் இருவரும் சண்டையிட்டுக்கொண்டு இறந்தனர். அங்கே வந்த இந்த ஆண்டான் தான் பெருமாளுக்காக இறக்கவேண்டும் என எண்ணிப் பல்லக்கிலிருந்து குதித்து, காலால் நடப்பதைக் கைவிட்டு, கைகளால் தவழ்ந்து, பசுவைப்போல் நீரில் விழுந்து, உடை துறந்து வகுளமரத்தடியில் மௌனியாய் இருந்தாராம்.[2]

கருவிநூல்தொகு

அடிக்குறிப்புதொகு

  1. ஓம் நமோ நாராயணாய
  2. பன்னீராயிரப்படி கூறும் கதை. ஆறாயிரப்படு இதனைக் கூறவில்லை.