திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில்

திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருக்கடையூருக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தரங்கம்பாடிக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில் தில்லையாடியிலிருந்து காட்டுச்சேரி வழியாகவும் வரலாம்.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள மூலவர் குரா மரத்தின் அடியில் மிகப்பெரிய புற்றின் கீழ் ஆதிநாகர் என்ற பெயரில் அமைந்துள்ளார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார்.[1]

வரலாறு

தொகு

குரா மரத்தைத் தல மரமாகக் கொண்டதால் திருக்குராச்சேரி என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் திருக்களாச்சேரி என்ற பெயரை இந்த ஊர் பெற்றது. திருமால், பாரத்வாஜர், ஆபஸ்தம்பர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். நாகப்பாம்பு உருவில் திருமால் சிவனை வழிபட்டதால் மூலவர் நாகநாதர் என்றழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்

தொகு