திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில்
திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம்.[3] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய வடிவிலான இறைவனாக விளங்குவது இங்கு மட்டும்தான். இத்தலம் திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது. தனியாக கோவில் உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. தினசரி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. [4]
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்கள்வனூர் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருக்கள்வனூர் |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம், (காமாட்சியம்மன் கோவில் உள்ளே) |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிவராகப் பெருமாள் |
தாயார்: | அஞ்சிலை வல்லி நாச்சியார் |
தீர்த்தம்: | நித்ய புஷ்கரணி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கையாழ்வார் |
விமானம்: | வாமன விமானம் |
தொலைபேசி எண்: | +91 44-3723 1988, 93643 10545 [2] |
அரூப லட்சுமி
தொகுஇத்திருத்தலத்தில் அரூப ரூபத்தில் இருக்கும் ஒரு லட்சுமியை வணங்கினால் அழகின் மீது உள்ள மோகம் குறையும் என்பது நம்பிக்கை.
மங்களாசாசனம்
தொகுதிருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.
நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே
- திருநெடுந்தாண்டகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.kamakoti.org/tamil/2divya151.htm
- ↑ 2.0 2.1 http://temple.dinamalar.com/New.php?id=72
- ↑ 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
- ↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)