திருக்கானப்பேருடையான்

திருக்கானப்பேருடையான் என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த சுந்தர பாண்டியனின் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றியவனாவான்.மழவச்சக்ரவர்த்தி என்ற பட்டப்பெயரினைக் கொண்ட இவனிற்கு குருவாக ஈசுவர சிவ உடையார் திகழ்ந்தார். தனது குருவிற்கு நிலத்தினைக் காணிக்கையாக அளித்த பெருமையினையும் உடையவன் இவன். திருக்கானப்பேர் நகரில் காளையார் கோயில் என்ற ஊரில் வளர்ந்த இவன் மழவர் மாணிக்கம் என மக்களால் அழைக்கவும் பெற்றான்.