திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
(திருக்கார்வானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கார்வானம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54 வது திவ்ய தேசம் ஆகும். 'கார்வானத்துள்ளாய் கள்வா' என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்கார்வானம்)
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கார்வானம்
பெயர்:திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்கார்வானம்)
அமைவிடம்
ஊர்:திருக்கார்வானம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள்
தாயார்:கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்:கவுரி தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
மங்களாசாசனம்
பாடல் வகை:மங்களாசாசனம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
விமானம்:புஷ்கல விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
தொலைபேசி எண்:+91-94435 97107, 98943 88279

மங்களாசாசனம்

தொகு

திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.

நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய்
     உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
     காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
     பெருமானுன் திருவடியே பேணினேனே
- திருநெடுந்தாண்டகம்

வெளி இணைப்புக்கள்

தொகு