திருக்குறுந்தாண்டகம்

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு

திருக்குறுந்தாண்டகம் (Tirukkuruntantakam) என்பது வைணவ சமயத்தின் பனிரெண்டு கவிஞர்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும்.[1][2][3] இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.

அனுமன் இலங்கையை எரியூட்டுகிறார், ராஜா ரவி வர்மா ஓவியம்.

பெயர்க்காரணம் தொகு

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர்.[4][5] திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது[6].

நாலாயிரத்திவ்யபிரபந்தத்திரட்டில் பங்கு தொகு

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு[7].[8]

திருக்குறுந்தாண்டகம் முதற்செய்யுள் தொகு

நிதியினைப் பவளத் தூணை
நெறிமையால் சினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கிஎன் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகி லேனே. [9]

உசாத்துணை தொகு

  1. Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. p. 417. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  2. Literary Heritage of the Tamils (in ஆங்கிலம்). International Institute of Tamil Studies. 1981. p. 230.
  3. RAMANUJAN, S. R. (2014-08-13). THE LORD OF VENGADAM (in ஆங்கிலம்). PartridgeIndia. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-3462-8.
  4. Zvelebil, Kamil (1974). Tamil Literature (in ஆங்கிலம்). Otto Harrassowitz Verlag. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-01582-0.
  5. Peterson, Indira Viswanathan (2014-07-14). Poems to Siva: The Hymns of the Tamil Saints (in ஆங்கிலம்). Princeton University Press. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-6006-7.
  6. http://www.rmrl.in:8000/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=44857[தொடர்பிழந்த இணைப்பு]
  7. http://saranagathi.org/blogs/books/thirukurunthandakam/
  8. Cutler, Norman (1987-05-22). Songs of Experience: The Poetics of Tamil Devotion (in ஆங்கிலம்). Indiana University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-11419-8.
  9. திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறுந்தாண்டகம்&oldid=3617307" இலிருந்து மீள்விக்கப்பட்டது