திருச்சபையின் விதிமுறைகள்

திருச்சபையின் விதிமுறைகள் என்பது கத்தோலிக்க திருச்சபையினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகும். இவை பொதுவாக எண்ணிக்கையில் சிறியதாகவும் அறநெரி மற்றும் பிற ஒழுக்கங்களை சேர்ந்ததாகவும் இருக்கும். பொதுவாக ஆறு விதிகள் எனக்கொள்வது மரபு.[1] இவ்விதிமுறைகள் பத்துக் கட்டளைகளோடு சேர்ந்தே பொதுவாக பார்க்கப்படும்.

விதிமுறைகள்

தொகு
  1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் திருப்பலி ஒப்புக் கொடு.
  2. ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுக.
  3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, நற்கருணை உட்கொள்.
  4. குறிப்பிட்ட நாட்களில் புலால் தவிர்த்து, நோன்பு போன்ற தவ முயற்சிகளை மேற்கொள்.
  5. குறைந்த வயதிலும், நெருங்கிய உறவிலும் திருமணம் செய்யாதே.
  6. உன் ஞான மேய்ப்பர்களுக்கு உன்னாலான உதவி செய்.

அனைத்துலகத் திருச்சபையில் ஆண்டின் எல்லா வெள்ளிக் கிழமைகளும் தவக்காலமும் தவநாள்களும் ஆகும்[2], ஆகவே விதி எண் நான்கின் படி அந்த நாட்களில் புலால் உணவைத் அல்லது ஆயர் பேரவையின் விதியமைப்புகளுக்கேற்ப வேறு ஓர் உணவைத் தவிர்த்தலை, அவை பெரும் விழாக்களாய் இருந்தாலன்றி, கடைப்பிடிக்கவேண்டும். திருநீற்றுப் புதன் மற்றும் பெரிய வெள்ளிக் கிழமையில் புலால் உணவைத் தவிர்த்தலையும் நோன்பையும் கடைப்பிடிக்கவேண்டும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. சின்னக் குறிப்பிடம்
  2. ஆறாம் பவுல் (திருத்தந்தை), Paenitemini II 1
  3. திருச்சபைச் சட்டத் தொகுப்பு: தவநாள்கள் 1249-1253