திருச்செங்காட்டங்குடிப் புராணம்
திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட புராணம் திருச்செங்காட்டங்குடிப் புராணம். [1] இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் பாடிய 6 புராண நூல்களில் ஒன்று. 392 பாடல்களைப் கொண்ட இந்த நூல் 11 சருக்கங்களாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. செங்காட்டங்குடி சிறுத்தொண்டர் வாழ்ந்த ஊர்.
நூலில் உள்ள பாடல் - எடுத்துக்காட்டு [2]
1
- மந்திரப்புரி செங்காடு சத்தியபுரி மலரோன்
- தந்திரப்புரி ஆத்தியின் வனம் தட மதம் கார்
- முத்து பாற்காபுரி சமுத்திரபுரி முடி சேயர்
- இந்திரன் மகிழ் கணபதீச்சரம் பேர் என்பாம்
2
- வாள் அற்றனர் அயில் அற்றனர் சிலை அற்றனர் வாகைத்
- தோள் அற்றனர் மார்பு அற்றனர் தொடை அற்றனர் போரின்
- கோள் அற்றனர் குடல் அற்றனர் இடை அற்றனர் கோடாத்
- தாள் அற்றனர்கை அற்றனர் மறுகண் வய வீரர்
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது