திருநரையூர் ராமநாதர் கோயில்

திருநரையூர் ராமநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கராஜபுரம் என்னுமிடத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் மூலவராக ராமநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி பர்வதவர்த்தினி. [1]

சிறப்பு

தொகு

சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவியுடனும், ஜேஷ்டாதேவியுடனும் குளிகன், மாந்திகன் ஆகிய இரு மகன்களோடும் குடும்பத்தோடு காட்சியளிப்பது இக்கோயிலின் சிறப்பாகும். மூலவருக்கு இல்லாத கொடி மரம் சனீஸ்வரருக்கு உள்ளது. தசரதன் இங்கு வந்து சனீஸ்வரரை வழிபட்டுள்ளார். சூரியனும் தன் மனைவி உஷாதேவியுடனும், பிரத்யுஷா தேவியுடனும் உள்ளார். [1]

திருவிழாக்கள்

தொகு

பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

தொகு