திருநீற்றுக் கொப்பரை
திருநீற்றுக் கொப்பரை என்பது சைவர்கள் தங்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் திருநீறு வைத்துக் கொள்ளும் கொள்கலன் ஆகும். இதனை விபூதிக் கொப்பரை என்றும் அழைப்பர். இந்து சமயக் கடவுள்களில் வெகு சில கடவுகள் இந்த திருநீற்றுக் கொப்பரையைத் தாங்கிய வடிவத்துடன் காணப்படுகின்றன.
குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் இந்த திருநீற்றுக் கொப்பரையைத் தாங்கியபடி உள்ளார். [1] மதுரை வடக்குவாசல் செல்லியம்மனும் இந்த திருநீற்றிக் கொப்பரையை இடக்கையில் வைத்துள்ளார். [2]
சிவ பக்தர்கள் கோயில்களுக்கு தானமாகத் தருகின்ற பொருட்களில் இதுவும் ஒன்றாகும். சைவ சன்னியாசிகளுக்கும், பரதேசிகளுக்கும் இந்த திருநீற்றுக் கொப்பரையைத் தானமாக தருவர்.