திருநெறி விளக்கம்
திருநெறி விளக்கம் [1] என்னும் இந்த நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனவே இவரைத் 'திருநெறிவிளக்கமுடையார்' என்கின்றனர். 'திருநெறி' என்னும் பெயரால் இந்த நூல் சிவப்பிரகாசம் என்னும் நூலைக் குறிப்பிடுகிறது. சிவப்பிரகாசம் என்னும் நூலிலுள்ள 100 பாடல்களையும் இந்த நூல் எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பாடலிலுள்ள சொற்களையும், தொடர்களையும் அப்படியே அமைத்து, சிவப்பிரகாசப் பாடல்களுக்கு விளக்கம் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. முத்திக்கான திருநெறி விளக்கம் என்பது இந்நூலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ள முழுப்பெயர்.
இந்த நூலுல் 117 விருத்தப் பாடல்கள் உள்ளன. முதல் இரண்டு பாடல்கள் எண்சீர் விருத்தங்கள். ஏனையவை அறுசீர் விருத்தங்கள். இது சைவசித்தாந்த நூல்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help)