திருநெல்வேலி - காந்திதம் ஹம்சஃபர் தொடர்வண்டி

காந்திஹாம் - திருநெல்வேலி ஹம்சாபார் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் குஜராத் மாநிலம் காந்திதாம் தொடருந்து சந்திப்பு மற்றும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி சந்திப்பு இடையே செல்லும் மேற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு விரைவு தொடருந்து ஆகும். வாராந்திர அடிப்படையில் 19423/19424 ரயில் எண்களுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[1][2]

16 சூலை 2018 முதல் இவ்வாராந்திர வண்டி எண் 19424 காந்திதாம் தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று மதியம் 1.50 மணியளவில் புறப்பட்டு, திருநெல்வேலியை புதன்கிழமை காலை 11.30 மணி அளவில் அடையும்.

19 சூலை 2018 முதல் வண்டி எண் 19423 திருநெல்வேலியிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, காந்திதாம் நகரத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 5.45 மணி அளவில் சென்றடையும்.

வழித்தடமும் நின்று செல்லும் இடங்களும்

தொகு
நிலைய குறியீடு நிலையம் வருகை புறப்பாடு
GIMB காந்திதாம் சந்திப்பு --- 14:00
ADI அகமதாபாத் சந்திப்பு 19:00 19:20
BRC வதோதரா சந்திப்பு 21:04 21:14
ST சூரத் 23:40 23:50
BSR வசாய் சாலை 03:05 03:10
PNVL பன்வெல் சந்திப்பு 04:25 04:30
RN ரத்னகிரி 09:00 09:05
MAQ மட்கான் சந்திப்பு 12:30 12:40
KAWR கார்வார் 13:40 13:42
MAJN மங்களூரு சந்திப்பு 19:30 19:40
CLT கோழிக்கோடு 22:57 23:00
SRR ஷோரனூர் சந்திப்பு 01:10 01:20
TCR திருச்சூர் 02:27 02:30
ERS எர்ணாகுளம் சந்திப்பு 03:55 04:00
KYJ காயங்குளம் சந்திப்பு 05:29 05:30
TVC திருவனந்தபுரம் 07:55 08:00
NJT நாகர்கோவில் நகரம் 09:28 09:30
TEN திருநெல்வேலி சந்திப்பு 11:30 ---

இரயில் பெட்டி வரிசையமைவு

தொகு

திருநெல்வேலி - காந்திதாம் ஹம்சஃபர் விரைவுவண்டி தொடரந்து நிலையங்கள், ரயில் வேகம் போன்ற தகவல்களைக் காண்பிக்க எல்இடி திரைகள் கொண்ட 3-அடுக்கு ஏசி பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதி வகுப்பு பெட்டிகளுடன் இயங்குகிறது. மேலும் அறிவிப்பு அமைப்பு, தேநீர், காபி மற்றும் பால் விற்பனை இயந்திரங்கள், பெட்டிகளில் உயிரிகழிவறை உள்ளன.

19423 திருநெல்வேலி - காந்திதாம் ஹம்சஃபர் விரைவுவண்டி பெட்டி வரிசை[1].

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
  EOG S3 S2 S1 B1 B2 B3 B4 B5 B6 B7 B8 PC B9 B10 B11 B12 B13 B14 B15 B16 EOG

மேற்கோள்கள்

தொகு
  1. Humsafar Gandhidham-Tirunelveli Express Train Rolls Out Today: Schedule, Time Table, Other Details
  2. Gandhidham-Tirunelveli Humsafar Express via Mangaluru