திருப்பதி பேருந்து நிலையம்
திருப்பதி பேருந்து நிலையம் (Tirupati bus station complex) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகரில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும். இது ஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமானது. இது மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்காணா ஆகிய மாநிலங்களில் உள்ள அருகிலுள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[1]
திருப்பதி பேருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°37′30″N 79°25′50″E / 13.62500°N 79.43056°E | ||||
உரிமம் | ஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் | ||||
இயக்குபவர் | ஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் | ||||
நடைமேடை | 69 | ||||
பேருந்து நிலையங்கள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | at-grade | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | TPT | ||||
பயணிகள் | |||||
பயணிகள் 2017 | 1.3 இலட்சம் | ||||
|
கட்டமைப்பு
தொகுதிருப்பதி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் 12 ஏக்கரில் மொத்தம் 69 நடைமேடைகளுடன் மூன்று சிறிய பேருந்து நிலையங்கள் உள்ளன.[2][3] ஸ்ரீஹரி பேருந்து நிலையம், முன்பு மத்திய பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்து கிழக்குப் பகுதிகள் சேவையினைப் பெறுகின்றன. ஸ்ரீனிவாசா பேருந்து நிலையம் மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான இடங்களுக்கானது. ஏழுகொண்டலா பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சப்தகிரி இணைப்பு பேருந்து நிலையம் திருமலைக்கான சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
திருப்பதி பேருந்து நிலையத்தில் 1500 பேருந்துகள் தினசரி 3900 பயணங்களை மேற்கொள்கின்றன.[3] இப்பேருந்து நிலையம் சாதாரண நாட்களில் நாள் ஒன்றிற்குச் சராசரியாக 1.3 லட்சம் பயணிகளைக் கையாள்கின்றது. இது மிகவும் பரபரப்பான பேருந்து நிலையங்களில் ஒன்றாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tirupati bus station gets facelift". Tirupati.
- ↑ 2.0 2.1 "Tirupati bus station gets new name". The Hindu (Tirupati). 29 October 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/tirupati-bus-station-gets-new-name/article3067373.ece. பார்த்த நாள்: 16 March 2016.
- ↑ 3.0 3.1 3.2 "New bus station likely to come up on outskirts of Tirupati". The Hindu (Tirupati). 26 December 2017. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/new-bus-station-likely-to-come-up-on-outskirts-to-ease-traffic-in-tirupati/article22278476.ece. பார்த்த நாள்: 19 September 2018.