திருப்பருத்திக்குன்றம் நல்ல மேய்ப்பர் ஆலயம்

சி. எஸ். ஐ நல்ல மேய்ப்பர் ஆலயம் (CSI Good Shepherd Church, Thiruparuthikundram Pastorate), இந்தியாவில், தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருப்பருத்திக்குன்றம் குருசேகரத்தின் தலைமை ஆலயமாகவும் இது விளங்குகிறது. இது தென்னிந்தியத் திருச்சபையின் சென்னைப் பேராயத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

வரலாறு தொகு

1921ஆம் ஆண்டு இசுக்காட்லாந்து போதகர் வண. ஜே. எச். மெக்லீன் மதப்பரப்புரைக்காக இந்தப் பகுதிக்கு வந்துள்ளார், 1921இல் முதல் திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, சுத்தமற்ற கால்வாய் நீரை பயன்படுத்தி வந்த இக்கிராம மக்களுக்கு மேற்கிலும் கிழக்கிலும் இரு கிணறுகளை இவர் உருவாக்கினார்.

தொழுகை ஆலயம் தொகு

இக்கிராமத்தின் மேற்கே மாத வாடகை ரூ.0.50 காசுக்கு வாடகை இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு, ஆரம்பப் பள்ளியும், இரவுப் பள்ளியும் அங்கு நடைபெற்றுள்ளது. 1952 ஆம்  ஆண்டு ஊரின் கிழக்கே தற்போதைய இடம், மதப்பரப்புனர் ஹார்துரை என்பவரால் ரூ 90க்கு  வாங்கப்பட்டுள்ளது.

நல்ல மேய்ப்பர் ஆலயம் கட்டப்படுதல் தொகு

1971இல் இவ்வாலயம் கட்ட ஆன தொகை ரூ 9000. போதகர் திரு.டேவிட் மற்றும் திரு காணிக்கராஜ் சபை ஊழியர் அவர்கள் காலத்தில் ஆலயம் கட்டபட்டது.

மேற்கோள்கள் தொகு