திருப்பறை சிவன் கோவில்

திருப்பறை சிவன் கோவில் என்பது இந்தியாவில் கேரளாவில் உள்ள பத்தனம்திட்ட மாவட்டத்தில் வல்லிக்கோடு என அறியப்படும் சிறிய குக்கிராமத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான பரமசிவனை வழிபடும் கோவிலாகும். இந்தக்கோவில் அச்சன்கோவில் நதிக்கரையில் அமையப் பெற்றதாகும். இந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகம் கோவில் அமைந்திருக்கும் குன்றின் உச்சியில் திறந்த வெளியுடன் மேற்கூரை இல்லாமல் வானத்தை நோக்கி இருப்பதாகக் காணப்படுகிறது. இந்த வகையில் இந்தக் கோவிலின் அமைப்பு இதர கோவில்களுடன் பார்க்கும் பொழுது, வேறுபட்டுக் காணப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பறை_சிவன்_கோவில்&oldid=3821138" இலிருந்து மீள்விக்கப்பட்டது