திருப்புன்முறுவல்

திருபுன்முறுவல் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சைவ ஆசாரியரால் எழுதப்பட்டது. இது 11 விருத்தம் கொண்ட ஒரு சிறு நூல். சீர்காழியில் வாழ்ந்த ‘கங்கை மெய்கண்டார்’ சிற்றம்பல நாடிகளின் ஆசிரியர். சிற்றம்பல நாடிகள் தம் தகுதியின்மையைப் பார்த்துத் தமது ஆசிரியர் புன்னகை புரிவதாகப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. எல்லாப் பாடல்களும் ‘எனும் குணியோ [1] வானோன் திருப் புன்முறுவலே’ என்னும் முத்தாய்ப்போடு முடிகின்றன.

பாடல் (எடுத்துக்காட்டு)

ஆறான் அந்தோ தீவினைகள் அந்தக் கரணம் சுத்தியிலேன்
தேறான் தேற உரைத்தாலும் செய்மா றென்கொல் திருநாமம்
கூறான் கூறு பவரிடத்தும் குறுகான் இவனை நமைக்காண
வாறான் ஓகோ எனும்குணியோ வானோன் திருபுன் முறுவலனே.

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்புதொகு

  1. குணக்குறிப்பு மெய்ப்பாடோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புன்முறுவல்&oldid=1372008" இருந்து மீள்விக்கப்பட்டது