திருப்பூணித்துறை இராதாகிருஷ்ணன்

திருப்பூணித்துறை இராதாகிருஷ்ணன் கேரள மாநிலத்தின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த கடம் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சி

தொகு

இராதாகிருஷ்ணனின் தந்தை ஜி. என். சுவாமி, ஒரு மிருதங்கக் கலைஞர். எனினும், தனது மகன்கள் இசைத் துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில் ஒரு எழுத்தராக இராதாகிருஷ்ணன் பணிபுரிந்து வந்தார். அதே வேளையில் கடம் வாசிக்கும் பயிற்சியும் மேற்கொண்டார்.

இசைப் பணி

தொகு

கே. ஜே. யேசுதாஸ், சஞ்சய் சுப்ரமண்யன் உள்ளிட்ட பிரபல பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக கடம் வாசித்து வரும் இராதாகிருஷ்ணன், 40 ஆண்டுகால இசையனுபவம் கொண்டுள்ளார்.

கடம் பயிற்றுவிப்பு

தொகு

இராதாகிருஷ்ணன் ஜி. என். சுவாமி நினைவு அறக்கட்டளைப் பள்ளி எனும் பயிற்றுவிப்பு நிலையத்தை 20௦௦ஆம் ஆண்டில் தொடங்கி, இளங்கலைஞர்களுக்கு கடம் வாசிக்க கற்றுத் தருகிறார்.

பெற்றுள்ள விருதுகள்

தொகு
  • மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளை சிறப்பு விருது, 2008

உசாத்துணை

தொகு

‘Time for me to reinvent, evolve’, தி இந்து, டிசம்பர் 12, 2008