திருமண வலைதளங்கள்
திருமண வலைதளங்கள் என்பவை திருமண வரன்களின் தரவுகளைக் கொண்ட தளமாகும். இந்த தளங்களை அனுகி பொருத்தமான மணமகன், மணமகளின் விவரங்களைப் பெற முடியும். இதற்காக தனித்த புகுபதிகை செய்த பின்னர், மணமகன் அல்லது மணமகளின் பெயர், வயது, கல்வித்தகுதி, பெற்றோர் பற்றிய விவரங்கள், நாடு, வசிப்பிடம், விருப்பங்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பெற முடியும். அதனால் இவற்றை பழங்கால தரகு முறைக்கு மாற்றாக உள்ளதென கருதலாம். [1]
இவ்வாறான திருமண வலைதளங்கள் தொடக்கத்தில் பொதுவாக இருந்தாலும் தற்போது, மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தனித்தனி வலைதளங்களாக உள்ளன. வயது, மதம், சாதி, உட்சாதி பிரிவுகள், மொழி போன்றவற்றை கொண்டு வரன் தேடுதலை எளிமையாகுகின்றனர். மறுமணம், விதவை, முதிர்கன்னிகள், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்காவும் வரன்கள் உள்ளன.
எதிர்ப்பு
தொகுகுறிப்பிட்ட மதம், சாதியைச் சேர்ந்த வரன்களை இந்த திருமண வலைதளங்களின் மூலமாக பெறுவதால், சாதிகளின் வீரியம் அதிகரித்துள்ளதாக சாதிமத எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆதாரங்கள்
தொகு- ↑ Chatterjee, Joyee. "The Internet as Matchmaker: A Study of Why Young Indians are Seeking Marriage Alliances Online" Paper presented at the annual meeting of the International Communication Association, TBA, San Francisco, CA, May 24, 2007