திருமலைராயன்
திருமலைராயன் என்பவன் ஒரு வள்ளல். அரசன். சாளுக்கிய சோழர் மரபில் வந்தவன். காளமேகப் புலவரைப் போற்றிப் பாதுகாத்தவன். காலம் 15 ஆம் நூற்றாண்டு. [1] காளமேகப் புலவரின் பாடலொன்றில் இது கூறப்படிவதைக் காணலாம்.
- பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
- அரியுண்ணும் உப்புமேல் ஆடும் – எரிகுணமாம்
- தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
- பாம்புமெலு மிச்சம் பழம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பக்கம் 55, 2005