திருமாலை

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு

திருமாலை என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி தொண்டரிடிப் பொடியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இந்நூல் 45 பாடல்களைக் கொண்டது. தொண்டரடிப் பொடியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப் பட்டதாகும். இந்நூல் பெரும்பாலும் அரங்கநாதன் பற்றி குறிப்பிடுகிறது. [1]

இந்தப் பாடல்கள் திருமாலிற்கு மாலை தொடுக்கும் வேளையில் பெரும்பாலும் பாடப்படுகிறது.

சில பாசுரங்கள்

தொகு

காவலில் புலனை வைத்துக்* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*

நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே,* மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற,*

ஆவலிப் புடைமை கண்டாய்* அரங்கமா நகர் உளானே.

— 1 ஆம் பாசுரம்

மேற்கோள்கள்

தொகு

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)

  1. "வைணவ இலக்கியங்கள் 2.5.3 திருமாலை, திருப்பள்ளி எழுச்சி| தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமாலை&oldid=3738040" இலிருந்து மீள்விக்கப்பட்டது