திருமூலர் ஞானம்

நூல்

திருமூலர் ஞானம் [1] என்னும் நூல் 'சித்தர் கோவை'யில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு நூல். 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருமந்திரம் இயற்றிய திருமூலர் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்தத் திருமூலர் காலத்தால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பிற்பட்டவர். அந்தாதியாக வரும் 11 பாடல்கள் இதில் உள்ளன. இதன் ஒவ்வொரு பாடலிலும் 'மூலம்' என்னும் சொல் வருகிறது. இறுதிப் பாடலில் 'திருமூலர்' என்னும் பெயரும் வருகிறது. இதனால் இந்த நூலுக்கு இந்தப் பெயரைச் சூட்டிவிட்டனர்.

பிரணவம், ஓங்காரம் மந்திரம் பற்றிய குறிப்புகள் இந்த நூலில் உள்ளன. இதன் பாடல் ஒன்று - எடுத்துக்காட்டு

மேவியதோர் சற்குருவின் பாதம் தன்னை

மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக் கொண்டு

ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்து

அத்தனார் வடிவம் என்றே அறிந்து கொண்டு

பாவனையுள் ஆனதெல்லாம் விட்டு நீங்கிப்

பகல் இரவு அற்று இடத்தே கருத்தை வைத்துச்

சீவனையும் சிவன் தனையும் ஒன்றாய்த் தானே

திருமூலர் பாதம் என்றே திடமாய்க் காணே.

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 212. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூலர்_ஞானம்&oldid=1438758" இலிருந்து மீள்விக்கப்பட்டது