திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா
திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா திருவண்ணமலையில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. அத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும். ஏழாவது நாள் பஞ்சரத மகாத்தேரோட்டம் நடைபெறும் திருவிழா பெரிய தேர் திருவிழா ஆகும்.[1][2][3][4]
பெரிய தேர்
தொகுபெரிய தேர் "மரத் தேர்" என்றும், "மகாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.[5] நாட்டுகோட்டை நகரத்தார் என்ற வாணிப மக்கள் திருவண்ணாமலை கோயில் தேர் திருப்பணிக்கும், அலங்கார நகைகளுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். மகாரதம் என்ற இந்த சாமித்தேர் 1853-ஆம் ஆண்டில் புதிதாக செய்யப்பட்டு அதே ஆண்டு கார்த்திகை திங்களில் 5 ஆம் நாள் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் இத்தேர் தீ விபத்தில் எரிந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
பெரிய தேர் திருவிழா
தொகுகார்த்திகை தீபத் திருவிழாவில் இது ஏழாவது நாள் திருவிழாகும்.[6] இத்தேர்த்திருவிழா நகரத்தில் பிரமாண்டமாக நடைபெறும். இதை காண லட்சகணக்கான மக்கள் வருவர். தேர் வடம் பிடித்து இழுப்பர். காலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மகாரதத்தில் எழுந்தருள்வார். தேர் ஓடும் போது சங்கிலி பிடித்து திரும்ப வசதியாக ஒவ்வொரு வீதி முனையிலும் ஒரு சந்து விடப்பட்டே இந்த நகரம் அமைந்துள்ளது. தேரோட்டத்தின் போது தேருக்கு முட்டுக்கட்டை போடுவோர் கம்மாள இனத்தவர் என்றும் அதே போல தேரின் பின்னால் சன்ன கட்டை போடுவோர் போயர் இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.
தேர் புறப்பாடு
தொகுஅண்ணாமலையார் தேர் புறப்படுவதற்கு முன்பு தேரடி வீதியில் உள்ள முனிசுவரனுக்கு சிறப்பு வழிபாடு, தேர்காலில் தேங்காய் உடைத்தல், பூசணிக்காய், எலுமிச்சை பலியிடுதல் போன்றவை நடைபெறும். பின்பு தேர் புறப்படும். இத்தேர் இழுக்கும் நிகழ்வில் வெளியூர் மக்களும் வேண்டுதல் உடையோரும் தேர் இழுப்பர்.
கரும்பில் தூளிகட்டுதல்
தொகுகுழந்தை பேறுபெறாத தம்பதிகள் குழந்தை பேரு வேண்டி வேண்டிகொள்வர். குழந்தை பேறுபெற்றவர்கள் பிறந்த குழந்தையை தூளியில் இட்டு கரும்பில் கட்டி கணவன்,மனைவியும் மாடவீதி வலம் வந்து வேண்டுதலை அன்று நிறைவேற்றுவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருவண்ணாமலையில் களைகட்டும் கார்த்திகை தீபத் திருவிழா: தேரோட்டத்தை காண அலைமோதும் பக்தர்கள் கூட்டம்".
- ↑ "அரோகரா’ கோஷம்.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய பஞ்சரத தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/thiruvannamalai/karthikai-deepam-festival-2023-pancharatha-chariot-festival-started-at-tiruvannamalai-annamalaiyar-559363.html. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "திருவண்ணாமலையில் பஞ்சமூர்த்திகள் தேர்த்திருவிழா...". ஆனந்த விகடன். https://www.vikatan.com/spiritual/temples/74574-tiruvannamalai-car-festival. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "திருவண்ணாமையில் நாளை தீபத்திருவிழா தேரோட்டம்". தினமணி. https://www.dinamani.com/religion/religion-news/2018/Nov/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3041670.html. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "Maha Deepam Festival, Thiruvannamalai", utsav.gov.in (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-07-06
- ↑ "தீபத் திருவிழா". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/1157925-t-v-malai-karthigi-deepam-festival.html. பார்த்த நாள்: 6 July 2024.