திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம்

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் ஆகும். இவ்விடம் திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம் அருகே செங்கம் சாலை எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த ஆசிரமத்தின் பிரதான மண்டபம் 1994 பிப்ரவரி 26 இல் சுவாமி சச்சிதானந்த மகராஜ் என்பவரால் திறக்கப்பட்டுள்ளது.

ஆசிரம‌ நுழைவுவாயில்

சமாதி கோயில்

தொகு

யோகி ராம்சுரத்குமார் 20 பிப்ரவரி 2001 இல் இறந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது ஜீவ சமாதி கோயில் அமைந்துள்ளது. சமாதிமேல் சிவலிங்க திருமேனி வைக்கப்பட்டுள்ளது. லிங்கத்தினை பார்த்தவாறு நந்தி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலைகள்

தொகு
 
பிரதான‌ நுழைவுவாயில்

ஆசிரமத்தின் பிரதான‌மண்டபத்தில் 'கலாசாகரம் ராஜகோபால்' என்பவரால் வடிவமைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் நின்ற வடிவில் உள்ள சிலை உள்ளது. இச்சிலையை யோகி ராம்சுரத் குமார் 1996 இல் பிரதிஷ்டை செய்துள்ளார்.

குடிலில் யோகி ராம்சுரத்குமார் அமர்ந்து ஆசி வழங்கும் வடிவில் மெலுகு பைபர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வாகனம் மற்றும் பொருட்கள்

தொகு

யோகி ராம்சுரத்குமார் இறுதியாக பயன்படுத்திய மகிழுந்து வாகனமும், அவரது மருத்துவ உடைகள், உபகரணங்கள், இறக்கும் போது படுத்திருந்த கட்டில் போன்றவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. [2] இந்த இடம் ஸித்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.

ஆசிரமத்தின் நுழைவுவாயிலுக்கு பிறகு கங்கா, யமுனா, சரஸ்வதி, யோகிராம் போன்ற பெயர்களில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன.

யோகி பள்ளி

தொகு

ஆசிரமத்திற்குள் யோகி ராம்சுரத்குமார் வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

இலவச மருத்துவ முகாம்

தொகு

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று இலவச மருத்துவ முகாம் ஆசிரமத்தில் நடத்தப்படுகிறது. இந்த சேவையை 1999 இல் யோகி ராம்சுரத்குமார் தொடங்கி வைத்தார்.

ஆசிரமத்திற்குள் உள்ளவை

தொகு
  • மிதியடிகள் பாதுகாப்பகம்
  • நூல்கள் மற்றும் காணொளி தட்டுகள் விற்பனையகம்
  • அலுவலகம்
  • கீர்த்தி ஸ்தம்பம்
  • தியாயனக்குடில்
  • நூலகம்
  • கோசாலை
  • அன்னதானக் கூடம்
  • மா தேவகி வேத பாடசாலை

கிரிவலப் பாதை

தொகு

ஆசிரமத்தினை சுற்றிவர பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கிரிவலப்பாதை என்கின்றனர். திருவண்ணாமலை மலையை சுற்றி வர இயலாதவர்கள் இந்த ஆசிரம பாதையை சுற்றி வந்தால் கிரிவலம் சென்ற பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஆதாரங்கள்

தொகு