திருவரங்கன் உலா
திருவரங்கன் உலா என்பது மாலிக் கபூர் தலைமையிலான தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார்.
வரலாறு
தொகுஇசுலாமிய படையெடுப்பும் கொள்ளையும்
தொகுகி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட முனைந்தான். பெரும்படையை எதிர்த்து கோவிலையும், கோவிலுள் உள்ள சிலைகள், ஆபரனங்கள் போன்றவற்றையும் காக்க திருவரங்க நகர மக்களும், ஆச்சாரியர்களும், தேவதாசிகளும் போராடினார்கள். நகர வாசிகள் ஆயுதமேந்தி போராடியதாகவும், தேவதாசிகள் இசுலாமிய படையினரை மயக்கி போராடியதாகவும் கருத்துண்டு. இப்போரில் பல வைணவர்கள் கொல்லப்பட்டார்கள். [1]
உற்சவர் சிலை பாதுகாத்தல்
தொகுஇசுலாமியர்களிடமிருந்து காக்க திருவரங்கத்தினை விட்டு பிற இடங்களுக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது.