திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

தமிழ்நாட்டின், வந்தவாசியில், உள்ள கல்லூரி

திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Thiruvalluvar College of Engineering and Technology) அல்லது டி.சி.இ.டி என பிரபலமாக அறியப்படுவது, தமிழ்நாட்டின், வந்தவாசியில், அமைந்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆகும்.

திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைLearn Faultlessly
உருவாக்கம்1998
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்முனைவர். எஸ். அருணாச்சலம்
அமைவிடம், ,
12°29′54.87″N 79°31′5.94″E / 12.4985750°N 79.5183167°E / 12.4985750; 79.5183167
இணையதளம்http://www.tcet.co.in/

வரலாறு தொகு

வரதம்மாள் மாணிக்கம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையானது 1996 ஆம் ஆண்டில் இலாப நோக்கற்ற அமைப்பாக 178, வகடரணம் பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005 என்ற முகவரியில் நிறுவப்பட்டது. இதன் நிர்வாக அலுவலகமானது ஆர் 6/4, வைகை தெரு, பெசண்ட் நகர், சென்னை -600 090 என்ற முகவரியியல் அமைந்துள்ளது. இதன் அறங்காவலர்களாக கல்வி, ஆய்வு, தொழில், வணிகம், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகள் உள்ளனர்.

திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது 1998 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், முன்னாள் சிண்டிகேட் உறுப்பினருமான பேரா முனைவர் எஸ். அருணாசலம் எம். இ (சிவில்), என்பவரால் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்திற்கு புது தில்லி, ஏ.ஐ.சி.டி.இ - அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு