திருவள்ளூர் விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்
விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.[1]
விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13°07′18″N 79°55′21″E / 13.121635°N 79.922455°E |
பெயர் | |
பெயர்: | விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பெரிய குப்பம் |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் |
சிறப்பு திருவிழாக்கள்: | அனுமன் ஜெயந்தி, இராம நவமி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி. பி. 1990ஆம் ஆண்டு |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 69.96 மீ. உயரத்தில், (13°07′18″N 79°55′21″E / 13.121635°N 79.922455°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருவள்ளூரிலுள்ள பெரிய குப்பம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]
விபரங்கள்
தொகுஅகத்தியர் தவம் செய்த இடமாகக் கருதப்படும் 'ருத்ரவனம்' என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் சுமார் 32 அடி உயரம் உடைய ஒற்றைக்கல்லால் ஆன ஆஞ்சநேயர் சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன், நரசிம்மர், கருடன், வராகன், ஹயக்ரீவர் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
கிழக்குத் திசை நோக்கி அருள்பாலிக்கும் அனுமன் முகம் பாவக் கறைகளை நீக்கி, பரிசுத்தமான மனதை உருவாக்குவதைக் குறிக்கிறது.
மேற்குத் திசை நோக்கி இருக்கும் கருட முகம் நம் மீதான தீய மந்திரங்கள், சூனிய தாக்கங்கள் மற்றும் உடலிலுள்ள விஷ ஊடுருவல் ஆகியவற்றை நீக்கும் என்பதை உணர்த்துகிறது.
வடக்குத் திசை நோக்கி அருளும் இலட்சுமி வராக முகம் கோள்களினால் நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்கும் மற்றும் நம் வாழ்வில் அனைத்து ஐசுவரியங்களும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.
தெற்குத் திசை நோக்கி அருள்பாலிக்கும் நரசிம்மர் முகம் எதிரிகள் மீதான பயத்தை நீக்கி வெற்றி கிட்டும் என்பதை உணர்த்துகிறது.
மேல் நோக்கி வீற்றிருக்கும் ஹயக்ரீவர் முகம் நமது சந்ததி, அறிவு, வெற்றி, முக்தி ஆகியவற்றைப் பெறுவதைக் குறிப்பிடுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Atmanirvana Web Desk (2023-04-04). "Sri Viswaroopa Panchamukha Anjaneya Swami Temple, Tiruvallur, Tamil Nadu". hinduism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-26.
- ↑ "Sri Viswaroopa Panchamukha Anjaneyaswami Temple, Tiruvallur" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-26.
- ↑ lightuptemple (2022-12-31). "Sri Viswaroopa Panchamukha Anjaneyaswami Temple, Tiruvallur". lightuptemples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-26.