திருவாதிரைக் களி

திருவாதிரைக் களி என்பது திருவாதிரை நோன்பை நிறைவு செய்யும் ஓர் உணவாகும். இது மார்கழி மாதத் திருவாதிரை நாளில் இறைவனுக்குப் படைக்கப்படுகிறது.

செய்முறை

தொகு

இதனைத் தயாரிக்க வெல்லத்தைக் கரைத்து சுத்தம் செய்து வெல்லநீருடன் அரைத்துப் பக்குவப்படுத்திய புழுங்கலரிசி, பாசிப்பருப்பு மாவை இட்டுக் கட்டியில்லாமல் கிளறி, தக்க பதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்க வேண்டும். இளஞ் சூட்டில் நெய் சேர்க்கப்படுகிறது. வாசத்திற்காக ஏலாக்காய் தூள், மேலதிக ருசிக்காக நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரிப்பருப்பு சேர்க்கப்படலாம்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாதிரைக்_களி&oldid=3658339" இலிருந்து மீள்விக்கப்பட்டது