திருவாலந்துறை சோளீசுவரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்

திருவாலந்துறை சோளீசுவரர் கோயில் என்பது பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறை என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் திருவாலந்துறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. காரியானுதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை, திருவரத்துறை, முடவன் துறை என்று துறைகள் சப்தத் துறைகளாக அழைக்கப்படுகின்றன. அவற்றில் இவ்விடமும் ஒன்றாகும்.[1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக சோளீசுவரர் உள்ளார். இவர் தோளீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகிஆவார்.

சிறப்பு தொகு

திருமாலும், பிரம்மாவும் தம் ஐயங்களை தீர்த்துக்கொண்ட இடமாக இக்கோயில் கருதப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உருவாகின்ற, ஸ்வேதா நதி, நீவா நதி என்றும் அழைக்கப்படும் வெள்ளாறு பரங்கிப்பேட்டையின் அருகே கடலில் கலக்கிறது. தீர்த்த யாத்திரையின்போது அருச்சுனன் தீர்த்தமலை அடிவாரத்தில் சிவ பூசைக்காக ஏற்பாடு செய்தபோது தண்ணீர் தேவைப்பட்டது. கண்ணனின் கருத்துப்படி மலையைத் துளைத்தான். அப்போது மலையிலிருந்து நீர் பெருகியது. பூசை நிறைவேறவே முடிவில் சிவன் அருச்சுனனுக்குக் காட்சி தந்தார். [1]

திருவிழாக்கள் தொகு

பிரதோஷம், சிவராத்திரி போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[1]

மேற்கோள்கள் தொகு