திருவாலவாயுடையார்
திருவாலவாயுடையார் என்பவர் பதினோராம் திருமுறையின் முதற்பாடல் சீட்டுக்கவி என்னும் பிரபந்தை எழுதியவராவார். இவரை மதுரை மீனாட்சியின் கணவன் சுந்தரேஸ்வராகிய சிவபெருமான் என்று சைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் வரலாற்றறிஞர்கள் திருவாலவாயுடையார் எனும் பெயரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு புலவர் வாழ்ந்திருக்ககூடுமென நம்புகிறார்கள்.
சீட்டுக்கவி பிரபந்தமாவது, பாணபுத்திரன் என்பவருக்கு பொருளுதவி செய்யுமாறு சேரமான் பெருமாள் நாயனாருக்கு திருவாலவாயுடையார் எழுதிய மடலாகும்.[1]