திரு அதிகைக் கலம்பகம்

திரு அதிகைக் கலம்பகம் (திருவதிகைக் கலம்பகம்) என்னும் நூலின் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நூல். இந்த நூல் கிடைக்கவில்லை.

மு. இராகவையங்கார் பல்லவர், பாண்டியர், சோழர் கல்வெட்டுகளை ஆராய்ந்து சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் நூலை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் சங்ககாலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான புலவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்தான் இந்த்த் திருவதிகைக் கலம்பகம்.

இந்த நூல் ‘திருவதிகை வீரட்டானமுடைய தம்பிரானார்’ மீது பாடப்பட்ட நூல். உத்தண்ட வேலாயுதக் கவி என்பவர் இந்த நூலைப் பாடிய புலவர். இதனைப் பாடியமைக்காக இந்தப் புலவருக்குத் திருவதிகைக் கோட்டைக்குள் வீடும் நிலமும் வழங்கப்பட்ட செய்தி இக் கோயிலிலுள்ள 1536 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலவர் திருவதிகையில் வாழ்ந்த அந்தணர். கௌண்டின்ய கோத்திரத்தவர். இவரது செந்த ஊர் தொண்டைநாட்டுச் சாலியூர்க் கோட்டத்துத் தனி ஊரான உத்திர மேரூரைச் சேர்ந்த ‘மகிபால குலகால கேசரி’.

வீரவல்லி தேவராச பட்டர், காசிநாதர், குப்பையன் என்னும் பெயர்களும் இவருக்கு உண்டு. [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_அதிகைக்_கலம்பகம்&oldid=1881060" இலிருந்து மீள்விக்கப்பட்டது