திரு ஆமாத்தூர்க் கலம்பகம்

(திரு ஆமாத்துர்க் கலம்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரு ஆமத்தூர்க் கலம்பகம் (திருவாமத்தூர்க் கலம்பகம்) என்னும் நூல் இரட்டைப்புலவர்கள் பாடிய நூல்களில் ஒன்று. இது 14 ஆம் நூற்றாண்டு நூல். இந்த நூலைப் பாடியதால் இவர்களைக் “கண்பாவு கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று பலராலும் பாராட்டப்படுகின்றனர். [1]

கலம்பக நூலின் உறுப்புகள் 18. இவற்றுடன் இவர்கள் இந்த நூலில் மேலும் சில உறுப்புகளையும் சேர்த்துப் பாடியுள்ளனர். நந்தி கலம்பகம், அளைடைய பிள்ளையார் கலம்பகம், திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் ஆகியவை இவரது காலத்துக்கு முன் தோன்றிய கலம்பக நூல்கள். இந்த நூல்களில் காணப்படாத இடைச்சியார், கொற்றியார், குறத்தியார், பிச்சியார், யோகினியார், வலைச்சியார் உறுப்புப் பாடல்கள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. சொற்பொருள் நயம், மடக்கு, கற்பனை முதலானவை இந்த நூலில் மற்ற நூல்களில் காணப்படுவனவற்றைக் காட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளன. இவர்கள் இந்தக் கலம்பகம் பாடிய பிறகு ஆமத்தூரில் திசை மாறி மேற்குப் பக்கத்திலிருந்து கிழக்குப் பக்கமாக ஓடியதாம்.

இந்த நூலில் 101 பாடல்கள் உள்ளன. இவற்றில் காப்புச் செய்யுள் ஒன்று போக எஞ்சிய 100 பாடல்களும் அகப்பொருள் தரும் பாடல்கள். இவற்றில் சந்தப்பாடல்கள் மிகுதி.

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)