திரூர் கிராமம்

[1]திரூர்  எனும் கிராமம் இந்திய நாட்டில்,தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து ஆகும். இதன் அட்சரேகை 13.1017962 மற்றும் தீர்க்கரேகை 79.9668308. சென்னை மாநில தலைநகர் திரூர் கிராமத்தில் இருந்து  35.3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திரூரிலிருந்து சென்னை சென்டலுக்கு ரயில் பாதை  நன்கு இணைக்கப்பட்டுள்ளது.  அருகில் 1.5 கி.மீ தொலைவில் செவ்வாபேட்டை  புறநகர் ரயில் நிலையம் உள்ளது.

திரூர் கிராமத்தை சுற்றி அருகிலுள்ள கிராமங்களின்  தூரம்  பின்வருமறு: அரண்வாயல் 1.3 கி. மீ., பெருமாள்பட்டு 2.9 கி. மீ., புட்லூர் 3.9 கி. மீ., த்ண்ணீர்குளம் 4.8 கி. மீ., அயலூர் 7.0 கி. மீ., திருவள்ளூர் 7.4 கி. மீ., வீரராகபுரம் 7.6 கி. மீ., சிவன்வாயல் 7.9 கி. மீ., ஈக்காடு8.1 கி. மீ., கோயம்பாக்கம் 8.1 கி. மீ., பேரத்தூர் 8.3 கி. மீ., ஈக்காடுகண்டிகை 8.4 கி. மீ., கல்யாணக்குப்பம் 9.9 கி. மீ., மேலானூர்10.9 கி. மீ., விஸ்ணுவாக்கம் 11.4 கி. மீ., வெள்ளியூர் 13.3 கி. மீ., கரிகலவக்கம் 13.6 கி. மீ., அரும்பாக்கம் 26.2 கி. மீ., விளாப்பாக்கம்,தொழுவூர் 1 கீ.மி, 1)  திரூவூர் கிராமத்தில்  மிகவும் 1,000 ஆண்டுகள் மிகவும் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோயில்  முதலாம் ஜத்தாவர்ம சுந்தர பாண்டியனால்  மலைக்கோயிலாக உருவாக்கப்பட்டது.   ஸ்ரீ சிருங்காண்டீஸ்வரர்வார்ப்புரு:திரூவூரின் பிரசித்திப்பெற்ற கோயில் உடனுறை உத்பாலாம்பிகை  என்பது இக்கோயில் பெயராகும்.இக்கோயில்பிரகாரத்தில் மூலவராக ஸ்ரீ சிருங்காண்டீஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.இக்கோயிலில் இராமலிங்க வள்ளலார் சன்னதியும்,அய்வர்(சேக்கிழார்,சம்மந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர்) மண்டபமும் உள்ளன. இக்கோவிலுக்கு மிக அருகில் மாவட்ட ஆசிரியர்கள் கல்வி மற்று பயிற்சி நிறுவனம் உள்ளது.

கோவில் வளாகம்
சிருங்காண்டீஸ்வரர் கோயில் நுழைவு கோபுரம்
அய்வர் சன்னதி
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

2)தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நெல் பரிசோதனை நிலையம் 1942 -ல் திரூவூரில் தொடங்கப்பட்டது. இது  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்  கட்டுப்பாட்டின் கீழ் 1981-ல் கொண்டுவரப்பட்டது. 1982-ல் இம்மையம் என  நெல் ஆராய்ச்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இது  தென் சென்னை -அரக்கோணம் ரயில் பாதை இடையே  அமைந்துள்ளது  மற்றும் சுமார் 1.5 கி. மீ  தொலைவில் செவ்வாபேட்டை ரயில் நிலையமும் மற்றும் 35 கி. மீ தொலைவில் சென்னையும் உள்ளது. அட்சரேகை : 137�N தீர்க்கரேகை: 7958�E உயரம் : 39.47 மீ சராசரி மழை : 1184மி.மீ  அதிகபட்ச வெப்பநிலை (சராசரி) : 33.1 சி குறைந்தபட்ச வெப்பநிலை (அர்த்தம்): 22.5�சி

மண் : மணல் கலந்த களிமண் மொத்த பரப்பளவு ஆராய்ச்சி மையம் : 15.85 ஹெக்டேர்

பயிர் பகுதி : 12.00 ஹெக்டேர் பயிர் சாகுபடியில் : அரிசி, பருப்பு, எண்ணெய் விதைகள் மற்றும் பச்சை பயறு.

  1. 18-07-2017 அன்று நேரிடையாக பார்வையிட்டு எடுக்கப்பட்ட புகைப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரூர்_கிராமம்&oldid=2402966" இலிருந்து மீள்விக்கப்பட்டது