திரையக் காணம்
திரையக் காணம் என்பது ஒரு சோதிட நூல். இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கல விருத்தி உரையிலும், பெருந்தேவனார் எழுதிய வீரசோழிய உரையிலும் திரையக்காணப் பாடல்கள் என்னும் குறிப்போடு ஆறு பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்களுக்கான சிறு விளக்கங்களும் அந்தந்த உரைகளில் உள்ளன. இந்தப் பாடல்கள் அந்த உரைநூலில் நிரல்நிறை அணிக்கு எடுத்துக்காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு பாடல்கள் [1]
சேய் புகர் பால் மதி ஆளும் முன் நாளினைக்
காய் கதிர் மால் பகர் சேயிடை நாளினை
மாசறு பொன் சனி காரி பொன்னாம் கடை
ஆசறு நாள்களை அஞ்சக ஓணே [2]
செவ்வாய் புகர் புத்தி திங்கள் கதிர் புத்தி
செவ்வாய் பொன் காரி சனி மந்த்ரி செவ்வாய் – வெவ் வாயும்
மேடம் முதல் ஈர் ஆறு வீட்டுக்கு இறை என்று
நீடு ஆய்ந்து சொன்னார் நிலத்து. [3]
கருவிநூல்
தொகுமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன
- ↑ இது நிரல்நிறை அஞ்சகம் - யாப்பருங்கல விருத்தி உரை
- ↑ வீரசோழிய உரையில் உள்ள பாடல்