திரொசோபில்லம்
திரொசோபில்லம் | |
---|---|
Drosophyllum lusitanicum in the wild | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | Drosophyllaceae |
பேரினம்: | Drosophyllum |
இனம்: | D. lusitanicum
|
இருசொற் பெயரீடு | |
Drosophyllum lusitanicum (L.) Link | |
Drosophyllum distribution | |
வேறு பெயர்கள் | |
|
திரோசோபில்லம் (Drosophyllum) என்பது ஒரு பூச்சியுண்ணும் தாவரம் ஆகும். இத்தார்வரம் திரோசிரோசியீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதில் திரோசோபில்லம் லுசிடேனிக்கம் என்னும் ஒரே வகைச் செடி மட்டுமே உள்ளது. இவை ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன இது ஒரு சிறு செடியாகும். இது பாறைச் சந்துகளிலும், பிளவுகளிலும் வளர்கிறது. இதன் தண்டுப்பகுதி 5- 15 செ. மீ வரை வளர்கிறது. இத்தண்டின் மேல் பகுதியிலிருந்து மெல்லிய நீண்ட இலைகள் காணப்படுகின்றன. இந்த இலைகள் 20 செ, மீ நீளம் வரை உள்ளன. 8 மி.மீ அகலம் கொண்டது. இலையில் மிகவும் நெருக்கமாக முடிகள் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு முடியிலும் ஒரு நீண்ட காம்பும், அதன் நுனியில் உப்பலான தலைப்பகுதியும் காணப்படும். இவை சுரப்பிகளுள்ள முடிகளாகும். இது பிசு பிசுப்பாக ஒட்டக்க்கூடியதாக இருக்கும். இதன் பசை பனித்துளி போல் காணப்படும். இதை பனி இலைச்செடி என்றும் அழைப்பார்கள்.[1]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ ஏற்காடு இளங்கோ (2004). அதிசயத் தாவரங்கள். சென்னை: அறிவியல் வெளியீடு. pp. 37, 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87536-09-8.