திற (குறும்படம்)

(திற இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திற என்பது ச. பிரின்சு என்னாரெசு பெரியாரால் இயக்கப்பட்ட ஒரு குறும்படம் ஆகும். இது 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. உருது எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் கோல்தோ சிறுகதையைத் தழுவி, 2002 குஜராத் படுகொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இக்குறும்படம் தமிழ்நாடு மாநில அளவிலும், தேசிய அளவிலும், பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும் காண்பிக்கப்பட்டது.

12 நிமிடங்கள் மட்டும் ஓடும் இக்குறும்படம், குஜராத் கலவரத்தில், தாயையும், தந்தையையும் பறிகொடுத்த 18 வயது முஸ்லிம் பெண், கொடியவர்களால் சிதைக்கப்படும் கொடுமையைப் பதிவு செய்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திற_(குறும்படம்)&oldid=2705620" இலிருந்து மீள்விக்கப்பட்டது