திறந்த சந்தை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திறந்த சந்தை எனப்படுவது வாங்குவோரும் -விற்போரும், அவர்களின் பொருட்களையும் -சேவைகளையும் சுமூக இணக்கப்பாட்டிற்கு அமைய, வாங்கி விற்கும் ஏற்பாட்டை குறிக்கிறது. திறந்த சந்தையின் வரையரையின் படி,வாங்குபவர்களையும் - விற்பவர்களையும் எந்தவிதமான ஏமாற்றுதலுக்கும் வற்புறுத்தலுக்கும் ஆட்படுத்த கூடாது. இந்த பொருளாதார சூழலில், பொருட்களின் விலை உற்பத்திக்கும் , தேவைக்கும் ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. விலை என்பது ஒரு பொருளின் உற்பத்தி அளவை மறைமுகமாக காட்டுகிறது. பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை மாறவில்லை, எனினும் உற்பத்தி குறைந்து விட்டது என்றால், அதன் விலை உயர்வடையக்கூடும். இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ஏன்னெனில், சில வாங்குபவர்கள் இதனை அதிகம் என்று எண்ணலாம். யாருக்கு, அது மிக-மிக தேவையோ , அதை அதிக விலையில் வாங்கலாம். ஆதலால் , தேவையும்- உற்பத்தியும் இணங்க உள்ளன.