திறந்த மகரந்தச் சேர்க்கை

திறந்த மகரந்தச் சேர்க்கை "(Open pollination)" அல்லது திறந்த மகரந்தச்சேர்க்கையுறுதல் "(open pollinated)"என்ற சொற்கள் தாவரங்களில் நடைபெறும் பால் இனப்பெருக்கத்தின் சூழலில் குறிப்பிடப்படும் பலவகைக் கருத்தினங்களைச் சுட்டுகின்றன.பொதுவாக இந்தச் சொல் பறவைகள், பூச்சிகள், காற்று, மாந்த இடையீடு போன்றவற்றால் நிகழும் பொலன்சேர்க்கையைக் குறிப்பிடுகிறது. .[1]

இரண்டு வகை சோளங்கள் பயிரிடப்படும் விளைநிலத்தில் இருந்து ஒரு வகை சோளத்தின்(மக்காச்சோளம்) ஆண் மலர்கள் நீக்கப்படுகிறது. இரண்டாவது வகை சோளத்தின் மூலம் மகரந்தச் சேர்க்கை அடைந்து அனைத்தும் கலப்பு விதைகளாக உருவாக ஆண் மலர்கள் நீக்கப்படுகிறது.


உண்மையான வளர்ப்பு இனப்பெருக்கம் வரையறை

தொகு

"திறந்த மகரந்தச் சேர்க்கையுறுதல்" பொதுவாக "உண்மையான வளர்ப்புசார் இனப்பெருக்கம்" செய்யும் விதைகளைக் குறிக்கிறது. ஒரு திறந்த மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரம், அல்லது அதே இனதின் மற்ற தாவரம் மூலம் மகரந்தச் சேர்க்கை நடை பெறும்போது, அதன் விளைவான விதைகளில் விளைவிக்கும் தாவரங்கள் கிட்டத்தட்ட தங்கள் பெற்றோர்களைப் போன்று காணப்படுகின்றன. இவை அண்மைக்கலப்பு (முதலாம் தலைமுறைக் கலப்பினம் (F1 hybrid) போன்றவை ) மூலம் உருவான தாவரத்தின் விதைகளில் இருந்து மாறுபட்டன. இவை பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். திறந்த மகரந்தச் சேர்க்கை இனங்கள் பெரும்பாலும் "நிலையான இனங்கள்" என்றும், அல்லது விதைகள் பல தலைமுறைகள் கடந்தும் பல ஆண்டுகள் அதன் பண்பு மாறாமல் இருக்குமேயானால், அவை "மர்புசார் இனங்கள்.[2] என்றும் அழைக்கப்படுகின்றன. மரபுசார் இனங்கள் திறந்த மகரந்தச் சேர்க்கையைக் கொன்டிருக்கும். ஆனால் திறந்த மகரந்தச் சேர்க்கை இனங்கள் அனைத்தும் மரபுசார் இனங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. திறந்த மகரந்தச் சேர்க்கை இனங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

திறந்த மகரந்தச் சேர்க்கையைப் பேணலில் அறைகூவலாக இருப்பது என்னவென்றால், பிற இனங்களின் மகரந்தம் உள் நுழையாமல் தடுப்பது ஆகும். மகரந்தம் எவ்வளவு தொலைவு பரவும் என்பதைப் பொறுத்து, பசுமைக்குடில்கள், உயரமான சுவர் அடைப்பிடங்கள், விளைநிலத் தனிமைப் படுத்துதல் அல்லது பிற முறைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.

இவை உண்மையான் வளர்ப்பு இனப்பெருக்கம் செய்பவையாக இருப்பதால், திறந்த மகரந்தச் சேர்க்கையுற்ற தாவரங்களின் விதைகள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள், உழவர்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.[2] மரபான தக்காளிகள், பீன்சு , பட்டாணிகள், இன்னும் பல காய்கறிகள் திறந்த மகரந்தச் சேர்க்கையுற்ற தாவரங்களுக்கு சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும்.

கட்டுபாடில்லா மகரந்தச் சேர்க்கை - வரையறை

தொகு

"திறந்த மகரந்தச் சேர்க்கை" என்பதன் இரண்டாவது பொருளாக, பூச்சிகள், பறவைகள், காற்று அல்லது இதர இயற்கை செயல்முறைகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதையும் குறிப்பிடலாம். இது தன் மகரந்தச் சேர்க்கையின்[3] ஒரு வகையான, மூடப்பட்ட மகரந்தச் சேர்க்கையின் "நேர்வழிப் பாலினப் பெருக்கத்து"க்கு நேர்மாறானது. மூடப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெற்றதை, ஒரு தாவரத்தின் விதைகள் அனைத்தும் குறிப்பிட்ட பண்பினைக் கொண்ட பெற்றோர்களிடம் இருந்து வந்தும், விரும்பிய பண்புகளைக் கொண்டிருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

திறந்த மகரந்தச் சேர்க்கையின் மூலம் உருவான தாவரங்களின் விதைகள், அதே வகை வழித்தோன்றல்களையே உருவாக்கும். இருப்பினும் கட்டுபாடில்லாத இனப்பெருக்கத்தாலும், அறியப்படாத மூலத்தில் இருந்து உருவாகும் மகரந்தத்தாலும், திறந்த மகரந்தச் சேர்க்கையின் மூலம் உருவாகும் தாவரங்கள் பல வேறுபட்ட மரபுப் பண்புகளைக் கொண்டிருக்கும். திறந்த மகரந்தச் சேர்க்கையால் பல்லுயிர்த்தன்மை பெருகுகிறது.

சில தாவரங்களில், தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதால், அடுத்த தலைமுறையிலும் அதே கிட்டத்தட்ட அதே வகை வழித்தோன்றல்களையே உருவாக்கும். உண்மையான வளர்ப்பு இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில் கூட, மரபு மாற்றத்தாலும், சடுதி மாற்றத்தாலும் புதிய வகை இனங்கள் உருவாகின்றன.

கலப்பாக்க உறவு

தொகு

கலப்பு மகரந்தச் சேர்க்கை என்பது, கட்டுபடுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கையின் ஒரு வகை ஆகும். இதில் மகரந்தம் புதிய வகை அல்லது இனத்தில்(அல்லது சிற்றினம்) இருந்து கொண்டு வரப்பட்டு கலப்பு செய்யப்படுவதால், கலப்பின வீரியம் பெற்று விரும்பிய பண்புகளைப் பெறுகிறது. இவ்வாறு உருவான கலப்பினம் சில நேரங்களில், உட்கலப்பினமாக இருக்கும். அவற்றில் திறந்த மகரந்தச் சேர்க்கை மூலம் விரும்பிய பண்புடைய உண்மையான வளர்ப்பு இனங்கள் பெறும் வரை அவை தேர்வு செய்யப்படுகின்றன.இது அகவளர்ப்பு கலப்பினம் எனப்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. Delany, Alex (2018-07-25). "What Are Heirloom Tomatoes, Anyway?". Bon Appétit. Archived from the original on 2021-10-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  2. 2.0 2.1 Ashworth, Suzanne (1991). Seed to Seed. Chelsea Green Publishing Co. pp. 13–16.
  3. Kearns, C.A.; Inouye, D.W. 1993. Techniques for pollination biologists. University Press of Colorado, Niwot, CO.

மேலும் படிக்க

தொகு
  • Ben Watson. "Hybrid or Open Pollinated". Gardening Articles: Care :: Seeds & Propagation. National Gardening Association. pp. 1–6. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.