திறன் மேலாண்மை
திறன் மேலாண்மை என்பது, மனிதரையும் அவர்கள் திறன்களையும் புரிந்து கொள்ளல், மேம்படுத்துதல், பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய செயல்பாடு ஆகும். முறையாகச் செயல்படுத்தப்படும் திறன் மேலாண்மை, குறித்த பணிக்குத் தேவையான திறன்களை அடையாளம் காண்பதுடன், ஒவ்வொரு பணியாளினதும் திறனையும் இரண்டுக்கும் இடையிலான இடைவெளியையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தேவையான திறன்கள், குறித்த நிறுவனத்தினாலோ அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனங்களினாலோ வரையறுக்கப்படலாம். இவை பொதுவாக, திறன்கள் சட்டகத்தின் (skills framework) அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. இது தகுதிச் சட்டகம் என்றும் அழைக்கப்படலாம். இது ஒரு திறன்கள் பட்டியலையும், அவை சார்ந்த தரப்படுத்தல் முறை ஒன்றையும் கொண்டிருக்கும். திறன்கள் மேலாண்மை பயனுள்ளதாக அமைய, ஒவ்வொருவரதும் திறன்களை அடிக்கடி மதிப்பீடு செய்து நிகழ்நிலைப்படுத்தும் தொடர்ச்சியான செயல்பாடாக அமைதல் வேண்டும்.