திறந்த மூல மென்பொருள்
(திறமூல மென்பொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திறமூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்றொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்றொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்றொடரைப் படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்.
இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவாற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதிப் பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது. இவற்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு என்பவர்.
சில பிரபலமான திறந்த மூல மென்பொருள் உரிமங்கள்
தொகு- குனூப் பொது வெளிப்படை உரிமம் (ஜிபிஎல் - GPL - GNU General Public License)
- குனூச் சிறுநிலை பொது வெளிப்படை உரிமம் (எல்ஜிபிஎல் LGPL - GNU Lesser General Public License)
- பெர்க்கெலி மென்பொருளாக்க உரிமம் (பிஎஸ்டி - BSD)
கட்டற்ற மென்பொருள்
தொகு- திறந்த மூல மென்பொருளுக்கும் இலவச மென்பொருளுக்கும் இடையே கணிசமான வேறுபாடுகள் உள்ளன : "திறந்த மூல மென்பொருள் என்பது ஒரு மேம்பாட்டு முறை ஆகும்; கட்டற்ற மென்பொருள் ஒரு சமூக இயக்கமாகும்.