திலசைட்டு
திலசைட்டு (Tilasite) என்பது CaMg(AsO4)F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனேட்டு கனிம ரத்தினக்கல்லாக இது அரியப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் காணப்படும் திலசைட்டு கனிமம் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 5 என்ற கடினத்தன்மை மதிப்பைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் சுவீடனுக்கான சுரங்க இயக்குநராகவும், வாசுட்மேன்லாந்தின் பிராந்திய ஆளுநராகவும் இருந்த டேனியல் திலசின் நினைவாக கனிமத்திற்கு திலசைட்டு எனப் பெயரிடப்பட்டது. 1895 ஆம் ஆண்டில் சுவீடியப் புவியியலாளர் எச்சால்மர் சுச்சோக்ரென் இப்பெயரைச் சூட்டினார். திலசைட்டு முதன்முதலில் சுவீடனின் வர்ம்லாந்து மாகாணத்தில் லாங்பன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
கிரிசுனைட்டும் திலசைட்டும் : நன்கு உருவாக்கப்பட்ட ஆரஞ்சு பழுப்பு நிறத்தில் கிரிசுனைட்டு படிகங்கள் கிட்டத்தட்ட வெள்ளை நிறத்தில் திலசைட்டு படிகங்கள் | |
பொதுவானாவை | |
---|---|
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | CaMg(AsO4)F |
இனங்காணல் | |
மோலார் நிறை | 222.30 |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.75 - 3.79 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.640 nβ = 1.660 nγ = 1.675 |
இரட்டை ஒளிவிலகல் | 0.035 |
2V கோணம் | 83° |
நிறப்பிரிகை | பலவீனம் |
1972 ஆம் ஆண்டில் பிளாத்து மற்றும் பலர். அரிசோனாவின் பிசுபீ அருகே வகைப்படுத்தப்பட்ட மாதிரிகளை கண்டறிந்தனர்.[2]
1994 ஆம் ஆண்டில், வடக்கு மாசிடோனியாவின் நெச்சிலோவோவிற்கு அருகில் பெர்மனெக்கு என்பவர் திலாசைட்டைக் கண்டுபிடித்தார்.[3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் திலசைட்டு கனிமத்தை Til[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tilasite".
- ↑ Bladh K W, Corbett R K, McLean W J, Laughon R B. American Mineralogist 57 (1972) 1880-1884 "The crystal structure of tilasite" http://rruff.geo.arizona.edu/AMS/minerals/Tilasite
- ↑ Bermanec V (1994) "Centro-symmetric tilasite from Nezilovo, Macedonia: a crystal structure refinement" Neues Jahrbuch für Mineralogie, Monatshefte 1994 289-294
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.