திலாசொல்டியோட்டில்

அசுட்டெக் தொன்மவியலில், திலாசொல்டியோட்டில் (Tlazolteotl) ஒரு பெண் கடவுள். இவள் தூய்மைப்படுத்தல், ஆவிக்குளியல், மருத்துவச்சிகள், அழுக்கு ஆகியவற்றுக்கான கடவுளாக இருப்பதுடன், பிறர்மனை கொள்வோருக்கான புரவலத் தெய்வமும் ஆவாள். நகுவாட்டில் மொழியில், திலாசோல்லி என்னும் சொல் தீய ஒழுக்கம், நோய் என்பவற்றைக் குறிக்கிறது. இதனால், திலாசொல்டியோட்டில் பாவங்கள், தீயஒழுக்கம், பாலியல் ஒழுக்கக் கேடுகள் ஆகியவற்றுக்கான கடவுளாக இருக்கும் அதே வேளை தூய்மைப்படுத்தலுக்கான தெய்வமாகவும் உள்ளாள். இவள், பாவங்களை மன்னிப்பதுடன், ஒழுக்கக் கேடுகளினால், குறிப்பாக பாலியல் ஒழுக்கக் கேடுகளினால் உண்டாகும் நோய்களையும் குணமாக்குபவளாகக் கருதப்படுகிறாள்.

மெக்சிக்கோவில் கிடைத்த திலாசொல்டியோட்டிலின் சிலை, கிபி 900-1521 (பிரித்தானிய அருங்காட்சியகம், id:Am1989,Q.3 )
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலாசொல்டியோட்டில்&oldid=1371204" இலிருந்து மீள்விக்கப்பட்டது