தில்குசா விருந்தினர் மாளிகை

இந்தியக் கட்டிடம்

தில்குசா விருந்தினர் மாளிகை (Dilkusha Guest House) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான விருந்தினர் இல்லமாகும். தெலுங்கான ஆளுநரின் வசிப்பிடமான ராச்பவனை ஒட்டியுள்ள சாலையில் இது அமைந்துள்ளது.[1] இது ஐதராபாத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கட்டட அமைப்பாகும். மாநில விருந்தினர் மாளிகையாக இந்த இல்லம் பயன்படுத்தப்படுகிறது.[2]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சர் அக்பர் ஐதாரி ஐதராபாத்தில் இருந்த காலத்தில் இதை ஆக்கிரமித்ததாக அறியப்படுகிறது. இவர் வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணியைத் தொடங்கி 1938-42 ஆம் ஆண்டு வரை நிசாமின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது வாழ்க்கையை முடித்தார் என்றும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "New consulate in Hyderabad; no protectionism, says Bush". 4 March 2006.
  2. "DILKUSHA GUEST HOUSE". THE HINDU IMAGES. https://thehinduimages.com/details-page.php?id=6977087&highlights=KUMARA%20KRUPA%20GUEST%20HOUSE%20ROAD. பார்த்த நாள்: 14 August 2023.