திவான் சந்த் சர்மா
இந்திய அரசியல்வாதி
திவான் சந்த் சர்மா (Diwan Chand Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1896 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று பிரித்தானிய பஞ்சாபின் குச்ராத் மாவட்டம் தௌலத்து நகரத்தில் இவர் பிறந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஓசியர்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதலாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Diwan_Chand_Sharma.png/220px-Diwan_Chand_Sharma.png)
திவான் சந்த் சர்மா 2ஆவது மக்களவைக்கும், 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களிலும் குர்தாசுபூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1957-1962, 1962-1967 மற்றும் 1967-1968 ஆண்டுகளில் குர்தாசுபூரில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ரினார். இவருக்குப் பின் பிரபோத் சந்திரா பதவியேற்றார். 1969 ஆம் ஆண்டு திவான் சந்த் சர்மா காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 18 December 2017.