திவ்யா ராணா

இந்திய நடிகை

திவ்யா ராணா ஒரு முன்னாள் இந்தித் திரைப்படத்துறையின் நடிகையும், புகைப்படக்கலைஞரும், தொழிலதிபருமாவார். ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டுள்ளார். [1] ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ் கபூர் அறிமுக நாயகனாக நடித்த ஏக் ஜான் ஹை ஹம் (1983) திரைப்படத்தில் திவ்யாவும், கதாநாயகியாக அறிமுகமாகி அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ஆனால் இப்படம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ராஜீவ் கபூர் மற்றும் மந்தாகினி இணைந்து நடித்த ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி (1985) திரைப்படத்திலும் திவ்யா இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார், இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், முதல் கதாநாயகியான மந்தாகினி பிரபலமடைந்த அளவு, திவ்யா பிரபலமாகவில்லை. ஆனாலும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் பதினோரு திரைப்படங்களில் திவ்யா நடித்துள்ளார். அவற்றில் வதன் கே ரக்வாலே, ஏக் ஹி மக்ஸத், ஆஸ்மான் (1984), மா கசம் (1985 திரைப்படம்), பரம் தரம் போன்றவை குறிப்பிடத்தக்கது. [2] மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பசல் என்பவரைத் மணமுடித்துள்ள திவ்யா, தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத்துறையை விட்டு முற்றிலுமாக விலகி சல்மா மானேகியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு, குடும்ப வாழ்க்கையில் முற்றிலுமாக ஈடுபட்டுள்ளார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து கொண்டே, பீங்கான் சிற்பங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். [3] [4]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு
1983 ஏக் ஜான் ஹை ஹம் சீமா
1984 ஆஸ்மான் ரேஷ்மா
1985 ராம் தேரி கங்கா மைலி ராதா பி சவுத்ரி
1985 மா கசம் சந்தோ
1987 வோ தின் ஆயேகா சுமன்
வதன் கே ரக்வாலே விம்லா (விம்லி)
பரம் தரம் முன்னிபாய்
ஹிம்மத் அவுர் மெஹானத் சோனா
1988 அக்ரி முகாப்லா ரூபா
அந்தா யுத் நர்ஸ் மாதுரி
ஏக் ஹி மக்ஸத் இந்து, டிம்பி ஆர் வர்மா
1989 கரிபோன் கா தாதா துளசி

மேற்கோள்கள்

தொகு
  1. "D E B U T P A I R S Hits and misses". 26 April 2002. http://www.screenindia.com/old/20020426/fcover.html. 
  2. "Rajsaab was a rare legend". 16 December 2009. http://www.dnaindia.com/speakup/report_rajsaab-was-a-rare-legend_1324183. 
  3. "Ex-actress comes calling". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-02-27.
  4. "ராம் தேரி கங்கா மைலி திவ்யா ராணா அல்லது சல்மா மானேகியா பாலிவுட்டில் அறிமுகமான ராஜீவ் கபூருடன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய நடிகை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_ராணா&oldid=3679256" இலிருந்து மீள்விக்கப்பட்டது